கல்லூரி மாணவன் அறையில் கணினித் திருட்டு- 4 பேர் கைது


கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரத்சந்திரபாபு. இவரது மகன் சந்திரதாஸ் (22). கோவை மாவட்டம் சூலூரிலுள்ள சப்தகிரி நகர் பகுதியில் அறையெடுத்து தங்கி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. இறுதியாண்டு படித்து வருகிறார். இவருடன் அறையில் மொத்தம் 3 பேர் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், புதனன்று சந்திரதாஸ் உள்ளிட்ட அனைவரும் வெளியில் சென்றுவிட்டு அறைக்கு திரும்பியுள்ளனர். அப்போது அறையில் 4 பேர் கொண்ட கும்பல் மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை திருடிக்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக அவர்களைப் பிடித்து சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சூலூர் பகுதியைச் சேர்ந்த முத்துகுமார் (21), ஜெயசுந்தர் (21), பரதன், சுபாஷ் என்பதும், அதேக்கல்லூரியில் பி.இ. இறுதியாண்டு படித்து வருவதும் தெரியவந்துள்ளது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவலர்கள், நான்குபேரையும் சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...