பணத்தை திருட முயன்றவர் கைது

திருப்பூர் மாவட்டம், திருமலைநகர் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (52). புதனன்று கோவைக்கு வந்துள்ளார். அப்போது உணவு உண்பதற்காக அவிநாசி சாலையில் உள்ள ஒரு உணவகம் முன்பு தனது காரை நிறுத்திவிட்டு உணவகத்தின் உள்ளே சென்றுள்ளார். 

இதனிடையே, இவரது காரில் வைத்திருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயினை மர்மநபர் ஒருவர் திருடிவிட்டு அங்கிருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார். இதனைக் கண்ட அர்ஜூனன் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரைப் பிடித்து பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவரிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அவர் ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (35) என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...