ஓரினசேர்க்கையை ஊக்குவிக்கும் ''திரைக்கு வராத கதை''க்கு தடை கோரி மனு

கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜாகிர் உஷேன். ''திரைக்கு வராத கதை'' திரைப்படத்தினை தடைசெய்யக் கோரி திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.



இதுகுறித்து ஜாகிர் உஷேன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

''கடந்த 28ம் தேதியன்று திரைக்கு வந்த படம் ''திரைக்கு வராத கதை''. துளசி ராஜ் இயக்கத்தில் கே.மணிகண்டன் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் இனியா, நதியா, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையானது பெண்கள் ஓரினசேர்க்கையை மையமாகக் கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுபோன்ற படங்களை வெளியிட்டால் சமூக பிரச்சனைகளான கள்ளத் தொடர்பு, விவாகரத்து உள்ளிட்டவை அதிகரிக்கும். சமீபகாலமாக பெண் குழந்தைகள் அதிகப்படியாக பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்படம் வெளியாகியுள்ளது பெண்களின் மீதான சமூகச் சிக்கலை மேலும் அதிகப்படுத்துவதாகவே அமையும். இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள ஓரின சேர்க்கையைக் கொண்டு இயக்கப்பட்டுள்ள ''திரைக்கு வராத கதை'' திரைப்படத்தை உடனடியாக தடைசெய்ய வேண்டும்'' என கூறினார்.

Newsletter

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...