கோவையில் கேரள மருத்துவ கழிவுகள் - தொடர்புடையவர்களுக்கு நீதிமன்ற காவல்



கோவை மாவட்டம், எட்டிமடையைச் சேர்ந்தவர் விவசாயி செல்லப்பகவுண்டர் (75). அப்பகுதியில் உள்ள இவரது விவசாய நிலத்தின் ஒரு பகுதியை கடந்த மாதம் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த முகமது இலியாஸ் (50) என்பவர் பிளாஸ்டிக் தரம் பிரிக்கும் நிறுவனம் அமைப்பதாகக் கூறி குத்தகைக்கு எடுத்துள்ளார். இதனை கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஷாஜியும், சதிரும் நிர்வகித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதி முழுவதும் கடந்த சில நாட்களாக கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனிடையே திங்களன்று அதிகப்படியான மூட்டைகளை ஏற்றிக்கொண்டு அப்பகுதிக்கு வந்த 24 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

இதுகுறித்து தகவலறித்து அப்பகுதிக்கு வந்த மதுக்கரை வட்டாட்சியர் சிவசங்கர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த லாரிகளில் கேரள மாநிலத்திற்கு உரிய கதிர்வீச்சு அபாயம் நிறைந்த மருத்துவக் கழிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அப்பகுதியில் கொட்டிவைக்கப்பட்டிருந்ததும் மருத்துவக் கழிவுகள் என தெரியவந்தது. இதையடுத்து, அந்த லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். காவல் துறையினரும் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.




இந்நிலையில், இதுகுறித்தான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இச்சம்பவத்திற்கு தொடர்புடைய முகமது இலியாஸ், ஹாஜி, சதிர் மற்றும் நில உரிமையாளர் ஆகியோரை நவம்பர் 11ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. 

மேலும், நீதிமன்றத்தின் உரிய உத்தரவு கிடைத்தவுடன் எட்டிமடை பகுதியில் கொட்டிவைக்கப்பட்டுள்ள கேரள மருத்துவக் கழிவுகளை அகற்ற அவர்களது வழக்கறிஞர் அருள்சக்திக்கு உத்தரவிடப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...