விக்கிரவாண்டி அருகே பரபரப்பு தண்டவாளத்தில் விரிசல் 4 ரயில்கள் தப்பின: இன்ஜின் டிரைவர் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்ப்பு

விக்கிரவாண்டி: விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டி அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் விரிசல் காரணமாக 4 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தப்பின விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் - விழுப்புரம் இடையே வி.சாலை என்ற இடத்தில் 148வது கி.மீ பாயிண்டில் ரயில்வே தண்டவாளத்தில் நேற்று அதிகாலை விரிசல் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3 மணியளவில் சென்னை நோக்கி சென்ற ரயில் இன்ஜின் டிரைவர் இதனைப்பார்த்து பேரணி பகுதி ரயில் நிலைய அதிகாரிக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் வந்து விரிசல் ஏற்பட்ட தண்டவாளப்பகுதியை தற்காலிகமாக சரி செய்தனர். அப்போது சென்னை நோக்கி வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 200 மீட்டர் தூரத்தில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அவ்வழியே வந்த கன்னியாகுமரி, குருவாயூர், மலைக்கோட்டை மற்றும் விழுப்புரம் - சென்னை இடையே இயக்கப்படும் யூனிட் ரயில் ஆகியவையும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. 

சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின் தற்காலிகமாக தண்டவாளம் சீரமைக்கப்பட்ட பின்னர் ரயில்கள் சுமார் 30 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டன.  யாரும் கவனித்திருக்காவிட்டால் பெரிய அளவில் விபத்து நடந்திருக்கும். அதிர்ஷ்டவசமாக ரயில் இன்ஜின் டிரைவர் கவனித்து சாமர்த்தியமாக தகவல் தெரிவித்ததால் 4 ரயில்கள் பெரும் விபத்தில் இருந்து தப்பின. விசாரணையில் தட்ப வெப்பநிலை மாற்றம் மற்றும் அதிர்வு காரணமாக தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...