ஆம்னி பேருந்து நிலையம் உடனடியாக மாற்றப்பட வேண்டும் - சுயமரியாதை மாணவர்கள் இயக்கம் மனு!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாளில் காந்திபுரம் சாலை போக்குவரத்து நெருக்கடியை சரிசெய்ய வேண்டி சுயமரியாதை மாணவர்கள் இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது; கோவை மாவட்டத்தில் காந்திபுரம் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து காந்திபுரத்தில் சக்தி ரோட்டில் ஆம்னி பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. மேம்பாலம் கட்டுமானப் பணிக்கு இடையூறாக இருக்கும் ஆம்னி பேருந்து நிலையம் கோவை அவிநாசி சாலையில் உள்ள நீலாம்பூருக்கு மாற்ற மாநகராட்சி இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் ஆம்னி பேருந்து நிலையம் இதுவரை அங்கு மாற்றப்படவில்லை. காந்திபுரம் மேம்பாலத்தின் இருபுறமும் பேருந்துக்கள் மாலை 7 மணி முதல் இரவு 12 மணி வரை நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. அதே நேரத்தில் அப்பகுதிகளில் அரசு பேருந்துக்கள் செல்வதற்கு கடினமாக உள்ளது. 

மேலும், இரவு நேரங்களில் பணியை முடித்து விட்டு வீடு திரும்பும் பெண்கள் தங்கள் வீட்டிற்கு செல்ல தாமதமாகிறது. இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கும் பொதுமக்கள் இந்த வழிச்சாலையை கடக்க பெரிதும் சிரமம்படுகின்றனர். மேலும், ஆம்புலன்ஸ் அவசரதிற்கு செல்ல முடியவில்லை. எனவே, மேம்பால பணிகள் முடியும் வரை ஆம்னி பேருந்துக்கள் இங்கு நிற்பதற்கு தடை செய்யவேண்டும். என்று ஆகஸ்ட் மாதம் மனு அளிக்கப்பட்டதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தற்போது அளித்துள்ள மனுவை ஏற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுயமரியாதை மாணவர்கள் இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...