சிகிச்சைக்குப் பின் குட்டி ஈன்ற காட்டு யானை- வனத்துறையினர் மகிழ்ச்சி

உடல் நலம் பாதிக்கப்பட்டு வனத்துறையினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பெண் காட்டு யானை திங்களன்று ஆண் குட்டியை ஈன்றது.

கோவை, பெரிய தடாகம் அருகே உள்ள வனப்பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த பெண் காட்டு யானைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வனத்துறை மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், வயிற்றில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் பாதிக்கப்பட்ட அந்த பெண் யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பதற்காக சாடிவயல் யானைகள் முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், திங்களன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் அந்த பெண் யானை ஒரு ஆண் குட்டியை ஈன்றது. இதைத்தொடர்ந்து அந்த இரு யானைகளுக்கும் வனத்துறையினர் சிகிச்சை மற்றும் உணவை வழங்கி பாதுகாத்து வருகின்றனர். 

உடல் நலம் பாதிக்கப்பட்டு பரிதாப நிலையில் மீட்கப்பட்ட பெண் காட்டு யானை தற்போது குட்டி ஈன்று நல்லமுறையில் உள்ளதால் அதனை மீட்ட வனத்துறையினர் மற்றும் வனத்துறை மருத்துவர்கள் மனோகரன் மற்றும் விஜயராகவன் ஆகியோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...