திருச்சி பாரதிதாசன் பல்கலை. விழாவில் 40 மாணவ, மாணவியர் மயக்கம்

திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த விழாவில் 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திடீரென மயங்கி விழுந்தனர்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை பாவேந்தர் பாரதிதாசன் மணிமண்டப திறப்பு விழா நடைபெற்றது. திரைப்பட இயக்குனர் பாரதிராஜா திறந்து வைத்தார். இதையொட்டி காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடனப்போட்டிகள் புதிய ஆடிட்டோரியத்தில் நடந்தது. 

இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று நடனமாடினர். 

இந்த ஆடிட்டோரியத்தில் போதிய காற்றோட்ட வசதி இல்லாததால் போட்டியில் நடனமாடிய மாணவ, மாணவிகள் 40க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து மயக்கமடைந்து விழுந்தனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆடிட்டோரியம் அருகே குடிநீர் வசதி இல்லை. மேலும், முதலுதவி வசதி எதுவும் இல்லை. இதையடுத்து முதலுதவி அளிக்கப்பட்டு மயக்கமடைந்த மாணவிகள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அரங்கில் காற்றோட்ட வசதி இல்லாததால் பார்வையாளர்களும் மூச்சுத் திணறினர்.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...