கோயமுத்தூர் ரைபிள் கிளப்பில் புதிய உறுப்பினர்களுக்கு பயிற்சி

1953ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட "தி கோயமுத்தூர் ரைபிள் கிளப்" தொடர்ந்து துப்பாக்கி சுடும் திறனுள்ளவர்களை பயிற்றுவித்து அவர்களை உலக அளவில் புகழ் பெற வைப்பதில் சிறப்பாக செயலாற்றி வருகிறது. கோவை மாநகரக் காவலர் ஆணையரை தலைவராகக் கொண்டு இந்த கிளப்பானது அவிநாசி சாலையில் உள்ள காவல் பயிற்சி பள்ளி மைதானத்தில் அமைந்துள்ளது.

நவீனரகத் துப்பாக்கி உட்பட அனைத்து பயிற்சி படைக்கலன்களைக் கொண்டும், திறமையான பயிற்சியாளர்களை கொண்டும் இயங்கிவரும் கிளப்பின் உறுப்பினர்கள் உலகளாவிய துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்று பல வெற்றிகளை தொடர்ந்து வென்று வருகிறது. இந்த கிளப்பின் உட்கட்ட அமைப்பினை மேம்படுத்துவதுடன், நவீன வசதிகளையும் ஏற்படுத்தி இந்தியாவிலேயே ஒரு முன்பதிரியான ரைபிள் கிளப்பாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

துப்பாக்கி சுடுவது ஈடுபடும் ஆர்வமும் உள்ள புதிய உறுப்பினர்களை இக்கிளப்பில் உறுப்பினர்களாக சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துத்திருப்பவர்கள் மட்டுமின்றி, துப்பாக்கி இல்லாத ஆர்வமுள்ள பிறரும் இந்தக் கிளப்பில் உறுப்பினராக சேர வாய்ப்புள்ளது. அவ்வாறு சேருபவர்கள் ரைபிள் கிளப் மூலமாக மாநில, தேசிய மற்றும் உலக அளவில் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்கவும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும். மேலும் தற்க்காப்பிற்காக துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் ரைபிள் கிளப்பில் உறுப்பினர் ஆவதன் மூலம் இக்கிளப்பின் மூலம் இந்தியா முழுவதும் உள்ள இம்மாதிரியான ரைபிள் கிளப்களில் துப்பாக்கி சுடுவதற்கான பயிச்சியினை பெறவும் வாய்ப்புள்ளது. 

எனவே, புதிய உறுப்பினர்களாக சேர ஆர்வமுள்ளவர்கள் மாநகர காவல் அலுவலகத்தை அணுகி புதிய உறுப்பினருக்கான விண்ணப்பித்தினை பெற்றுக்கொள்ளுமாறும் அதனை பூர்த்தி செய்து வருகின்ற 20.11.2016ம் தேதிக்குள் "மாநகரக் காவல் ஆணையர் மற்றும் தலைவர், 'தி கோயமுத்தூர் ரைபிள் கிளப்' காவல் ஆணையாளர் அலுவலகம், ஹசூர் ரோடு, கோயமுத்தூர்-18." என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. 

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...