ஐஏஎஸ் அகாடமியில் தீ விபத்து- ஒருவர் பலி, 4 பேர் படுகாயம்


கோவை, காந்திபார்க் அருகே இரண்டடுக்கு மாடிக் கட்டிடத்தில் தனியார் நிறுவனமான கேபிஆர் ஐஏஎஸ் அகாடமி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 150க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில், வெள்ளியன்று (இன்று) 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் அந்த அகாடமியில் தேர்வு மற்றும் பயிற்சி வகுப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

அப்போது, அக்கட்டிடத்தின் அடித்தளத்தில் மின்கசிவு காரணமாக அங்கு வைக்கப்பட்டு இருந்த பட்டாசுப் பெட்டிகளில் திடீரென தீ பற்றி எரியத் தொடங்கியது. இது அருகில் இருந்த நூலகத்திலும் பரவியதால் அக்கட்டிடத்தில் அடித்தளம் முழுவதும் தீப்பற்ற தொடங்கியது. அதன் மூலம் ஏற்பட்ட புகை காரணமாக முதல் தளம் மற்றும் இரண்டாம் தளத்தில் பயிற்சி வகுப்பில் இருந்த மாணவர்கள் உடனடியாக வெளியேறினர். அருகில் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீ அணைக்க முன்றனர். கட்டிடத்தில் சக்திவேல், காயத்ரி, விஜயலட்சுமி, அரங்கநாதன், செல்வராஜ் ஆகிய 5 பேர் மட்டும் மேல் தளத்தில் சிக்கிக் கொண்டனர்.



இதனைத்தொடர்ந்து, அங்கு வந்த தீயனைப்புத் துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 





இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சக்திவேல்(23) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.தகவல் அறிந்த அப்பகுதிக்கு வந்த கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மற்றும் மாவட்ட காவல் ஆணையர் அமல்ராஜ் சம்பவ இடத்தினையும், மீட்புப் பணிகளையும் பார்வையிட்டுனர்.







யூபிஎஸ் மின் கருவியில் ஏற்பட்ட மின் கசிவினாலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து கோவை மாவட்ட தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு அலுவலர் சந்திரன் கூறுகையில்:-

காந்திபார்கில் உள்ள ஐஏஎஸ் அகாடமியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதை தொடர்பாக மாலை 3:45 மணியளவில் எங்களுக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்தவுடன் அருகில் உள்ள தெற்கு, மேற்கு ஆகிய பகுதிகளில் உள்ள தீ அணைப்பு வாகனங்களை அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போது, அருகில் உள்ளவர்கள் தீயை அணைப்பதற்கு போராடி கொண்டிருந்தனர்.

பின்னர் தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கப்பட்டது. முதலில் தரை தளத்தில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. அதன் மூலம் ஏற்பட்ட புகை காரணமாக முதல் தளம் மற்றும் இரண்டாம் தளத்தில் பயிற்சி வகுப்பில் இருந்த மாணவர்கள் உடனடியாக வெளியேறினர். அதில் 5 மாணவர்கள் உள்ளே இருப்பதாக தகவல் அறிந்தபின் தீ அணைப்பு வீரர்கள் உள்ளே சென்று அவர்களை மீட்டனர். அவர்களுக்கு தேவையான முதலுதவி சிகிச்சை மூலமாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதில் 25 தீ அணைப்பு வீரர்கள் மற்றும் 5 அதிகாரிகள் மூலம் தீ அணைப்பை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...