வீர மரணமடைந்த காவலர்களுக்கு இன்று வீரவணக்க நாள் அனுசரிக்கப்பு!

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி அன்று பணியின் போது வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடுமுழுவதும் உள்ள காவலர்களுக்கு வீர வணக்க நாள் இன்று அனுசரிக்கப்பட்டது வருகிறது. 

1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன  ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி ‘காவலர் வீரவணக்க நாள்’ அனுசரிக்கப்படுகிறது.

இதனை அடுத்து இன்று, சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் இருக்கும் வீரவணக்க நாள் நினைவிடத்தில் டிஜிபி ராஜேந்திரன், காவல் ஆணையர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். பணியின் போது உயிர் நீத்த காவலர்களின் நினைவாக இந்த வீர வணக்கம் நாள் கடைபிடிக்கப்பட்டது. மேலும், தலைநகர் தில்லியிலும் சானக்கியாபுரி பகுதியில் உள்ள காவலர்கள் நினைவிட மைதானத்தில் காவலர்கள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று உயிர் நீத்த காவலர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...