வடகொரியா ஏவுகணை சோதனை மீண்டும் தோல்வி

சியோல்: வடகொரியா உலக நாடுகளின் கடும் எதிர்ப்பு மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களையும் மீறி தொடர்ந்து அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் சோதனை செய்து வருகிறது.

ஏவுகணை சோதனை:

வடகொரியா கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட 'முசுடன்' ஏவுகணை சோதனையை நடத்தியது. ஆனால் அந்த சோதனை தோல்வியில் முடிந்தது. வடகொரியாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் வடகொரியா நேற்று மீண்டும் 'முசுடன்' ஏவுகணை சோதனையை நடத்தியது. இருப்பினும் இந்த முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது.

8 முறை சோதனை:

இதுபற்றி தென்கொரிய கூட்டுப்படைகளின் தலைவர் விடுத்து உள்ள அறிக்கையில், வடக்கு பியாங்யாங் மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு முசுடன் ஏவுகணை சோதனை நடைபெற்றதாகவும், அந்த ஏவுகணை, தரையில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட சில நொடிகளில் வெடித்து சிதறி விட்டதாகவும் கூறப்பட்டு உள்ளது. வடகொரியா இந்த ஆண்டில் 8 முறை முசுடன் ஏவுகணை சோதனையை நடத்தி இருப்பதும், அவற்றில் ஒன்று மட்டுமே வெற்றி அடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

தேர்தல் சின்ன விவகாரம்: குப்பை சேகரிப்பு விசில் ஒலிக்கத் தடை கோரி மனு

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் குப்பை சேகரிக்கும்போது அடிக்கும் விசில், அரசியல் கட்சியின் தேர்தல் சின்னம் என்ப...

தேர்தல் சின்னமான விசில் ஒலிக்கு தடை கோரி மாமன்ற உறுப்பினர் மனு: கோவை ஆட்சியருக்கு சித்ரா வெள்ளியங்கிரி கோரிக்கை

கோவை மாநகராட்சியில் குப்பை சேகரிப்பின்போது தூய்மைப் பணியாளர்கள் பயன்படுத்தும் விசில், மற்றொரு அரசியல் கட்சியின் தேர்தல்...

தேர்தல் சின்னமான விசில் ஒலிக்கு தடை கோரி கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மனு

கோவை மாநகராட்சியில் குப்பை சேகரிக்கும் தூய்மைப் பணியாளர்கள் விசில் பயன்படுத்துவது மற்றொரு அரசியல் கட்சியின் தேர்தல் சின்...

பி.என்.புதூரில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினம்; வே.கௌதம்குமார் நினைவஞ்சலி

கோவை பி.என்.புதூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மார்ச் 22-ல் தூக்கிலிடப்பட்ட பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகி...

கோவை விமான நிலையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கோவை விமான நிலையம் வந்தடைந்தார். திமுக மாநில தீர்மானக் குழு செயலா...

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: 100 சதவீத வாக்களிப்பு விழிப்புணர்வு பேரணியை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran துவக்கி வைத்தார்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான 100 சதவீத வாக்களிப்பு வி...