கோவையில் அஞ்சல் ஊழியர்கள் தர்ணா போராட்டம்

ஜி.டி.எஸ் ஊழியருக்கான போனஸ் தொகையை ரூ.7000 ஆக உயர்திக் கொடுக்க வேண்டுமெனவும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அணைத்து அஞ்சல் மற்றும் நிர்வாகப்பிரிவு ஊழியர் சங்கங்கள் இணைந்து மாபெரும் மண்டல தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்.எஸ் புரம், தலைமை தபால் நிலையம் முன்னால் ஜி.டி.எஸ் ஊழியருக்கான போனஸ் தொகையை ரூ.7000 ஆக உயர்த்த கோரி இரண்டாம் கட்ட போராட்டமான தர்ணா போராட்டம் இன்று நடைபெற்றது. இப்போராட்டம், கோவை தபால்காரர் மண்டல செயலர் ஸ்ரீதர் மற்றும் கோவை நிர்வாக மண்டல செயலர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இதனை ஆர்.எம்.எஸ் மண்டல தலைவர் துவக்கி வைத்தார்.

போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. அதில்,

1.ஜி.டி.எஸ் ஊழியருக்கான ரூ.7000 போனஸ் வழங்க வேண்டும்.

2.01.10.2006, 01.01.2016 முதல் 6வது, 7வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் ஊழியர்களுக்கு புதிய ஊதியம் மற்றும் நிலுவை தொகையை வழங்க வேண்டும்.

3.ஜி.டி.எஸ் ஊழியர்களுக்கு தபால்காரர், எம்.டி.எஸ் விடுப்பு காலங்களில் பணியாற்றுவதற்கான புதிய ஊதியம் மற்றும் நிலுவை தொகை 01.012016 முதல் வழங்க வேண்டும்.

என்ற கோரிக்கைகள் வைத்தனர். 



இந்த தர்ணா போராட்டத்தில் திருப்பூர் மண்டல செயலர் ராஜேந்திரன், ஆர்.எம்.எஸ் மண்டல செயலர் சுந்தரவடிவேல், ஓய்வூதிய சங்க மண்டல செயலர் கருணாநிதி, ஜி.டி.எஸ் மண்டல தலைவர் மரிய அந்தோணி மற்றும் அனைத்து அஞ்சல் ஆ.எம்.எஸ், எம்.எம்.எஸ், பி.எஸ்.டி, ஜி.டி.எஸ் மற்றும் நிர்வாகப்பிரிவு ஊழியர்கள் சங்கங்கள் கலந்து கொண்டது. ஸ்ரீதரன் மற்றும் எபினேசர் காந்தி ஆகியோர் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர்.

Newsletter

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...