கோவை பவர் ஹவுஸ் பகுதியில் அனைத்து கட்சிகளின் சார்பில் சமூக ஆர்வலர் சிவாவை விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை பவர் ஹவுஸ் பகுதியில் அனைத்து கட்சிகளின் சார்பில் சமூக ஆர்வலர் சிவாவை விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கு.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், ஆதித்தமிழர் கட்சி, சமூக நீதிக்கட்சி உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட சூழல் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். 

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், கார்ப்ரேட் சாமியார் ஜக்கி வாசுதேவுக்கு ஆதரவாக கோவை மாவட்ட காவல்துறையினர் செயல்படுவதாகவும், சட்டவிரோதமாக ஈஷா மையத்தில் நடைபெரும் புகார்கள் குறித்து இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, பொய்யான புகாரின் பேரில் சமூக ஆர்வலர் சிவாவை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும், உடனடியாக பொய்வழக்கை திரும்பப்பெற்று விடுதலை செய்ய வேண்டும், மேலும், சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் ஜக்கிவாசுதேவை கைது செய்ய வேண்டும் என உரையாற்றினர். முன்னதாக போராட்டத்திற்கு அனுமதி மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைதுசெய்தனர். 

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...