ராணுவ வீரர்களுக்கான ஆட்தேர்வு முகாம்- கோவையில் குவிந்த இளைஞர்கள்

கோவையில் ராணுவ வீரர்களுக்கான ஆட்தேர்வு முகாம் புதனன்று (இன்று) துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இளைஞர்கள் கோவையில் குவிந்துள்ளனர்.

சென்னை 110 ராணுவ பட்டாலியன் மேற்பார்வையில் பிராந்திய ராணுவப்படை வீரர்களுக்கான ஆட்தேர்வு முகாம், கோவை காவலர் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் புதனன்று அதிகாலை துவங்கியது. இதில் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பாண்டிச்சேரி என இராஜஸ்தான் முதல் லக்க்ஷதீப் வரை உள்ள 14 மாநிலங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்தி 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். 

முன்னதாக தேர்வில் கலந்துகொள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மைதானத்தை சுற்றி காத்திருந்ததால் காவல் துறையினர் அவர்களை கட்டுப்படுத்தும் பணியில் செவ்வாயன்று இரவு முதல் ஈடுபட்டனர். கர்னல்.லோகநாதன் தலைமையில் நடத்தப்பட்டு வரும் இம்முகாமில், முதற்கட்டமாக இளைஞர்களின் உடற்தகுதி தேர்வான ஓட்டப் பந்தயம், நீலம் தாண்டுதல் போன்ற தேர்வுகள் நடத்தப்படுவதுடன் அவர்களின் எடை, உயரம் உள்ளிட்ட உடற்தகுதிகளும் மற்றும் கல்விச் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இன்று நடைபெறும் தேர்வில், தேர்ச்சிபெறும் இளைஞர்கள் அடுத்து மருத்துவ சோதனைகள் மற்றும் நேர்முக தேர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்ற 23 ஆம் தேதிக்குள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

4 ஆயிரத்தி 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ள இந்த பிராந்திய ராணுவப் படை வீரர்களுக்கான தேர்வில் 23 வீரர்களும், ஒரு ராணுவ மெஸ் பணியாளரும் தேர்வு செய்யப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...