வடகிழக்கு பருவமழை முன்னிட்டு கோவையில் ஆய்வுக் கூட்டம்


கோவை மாவட்ட மாநகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சாரிக்கை நடவடிக்கைகள் குறித்தான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் செவ்வாயன்று  நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பேசுகையில், வடகிழக்கு பருவமழை வருவதை முன்னிட்டு மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக மழை காலங்களில் மாவட்ட நிர்வாகம் அமைத்த பேரிடர் குழுவுடன் இணைந்து மாநகராட்சி பணியாளர்களும் பணியாற்றுவார்கள். மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து நீரினை உடனடியாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு மாற்று ஏற்பாடாக வெள்ள நிவாரண தங்குமிடங்களான பள்ளிக்கூடம், சமுதாயக் கூடம், திருமண மண்டபம் ஆகியவற்றை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் பயன்படுத்துவதற்கு தேவையான அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கவும் மற்றும் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.



மேலும், மழைக்காலங்களில் வரும் புகார்களை கண்காணிக்க 24 மணிநேரமும் செயல்படும் வகையில் 8190000200 ஆகிய  தொலைபேசி எண்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் பெறப்படும் புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மழைக்காலங்களில் நாய் தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க பொதுமக்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. மாநகராட்சி பகுதிகளில் உள்ள தெருக்களில் கழிவுகளை அகற்றிடவும் திறந்தவெளி கழிப்பிடங்களை பயன்படுத்த வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தியும் சுற்றுப்புறங்களை சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும். குடிநீர் மேல்நிலைத் தொட்டி மற்றும் நீர் தொட்டிகளை காலமுறையில் சுத்தம் செய்யப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார். 

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, மாநகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், நகர்நல அலுவலர் மரு.சந்தோஷ்குமார் மற்றும் அனைத்து உதவி ஆணையர்கள், பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...