சர்வதேச உணவு நாளில் அதன் மதிப்பை நாம் உணர வேண்டும்


உணவு, உடை, உறைவிடமே ஒரு மனிதனின் அடிப்படைத் தேவையாகும். உலக மக்கள் அனைவரும் அதற்காகவே வாழ்ந்துவருகின்றனர். மனிதன் உடையின்றியும், தங்க இடமின்றியும் கூட வாழ்ந்துவிடலாம். ஆனால், உணவின்றி வாழ்வு என்பது சாத்தியமற்றது.

இதுகுறித்து, உணவு சம்பந்தமான தொழிலில் ஈடுபட்டுள்ளோர் சிலர் நம்மிடம் கருத்தை பகிர்ந்துள்ளனர்.

ரெசிடென்சி டவர்சின் பொதுமேலாளர் எரின் லூயிஸ் கூறுகையில்:-

"எங்கள் உணவகத்தின் உணவுக்கு முழு பொறுப்பு நாங்கள் ஏற்கிறோம். இவ்வுலகில் பல மில்லியன் மக்கள் உணவின்றி உள்ளனர். பட்டினியால் ஊட்டச்சத்து இன்றி இறப்போரின் எண்ணக்கை மிக அதிகம். உணவு கிடைக்கப்பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள். உங்களால் எந்தளவிற்கு சாப்பிட முடியுமோ அந்தளவிற்கு உணவு பெற்றுக்கொள்ளுங்கள். எந்தளவிற்கு உணவு பெறுகிறீர்களோ அதை முழுவதும் உண்டுவிடுங்கள். இதுதான் தங்கள் உணவகத்திற்கு வரும் விருந்தினருக்கு நாங்கள் தெரியப்படுத்துவது. எங்கு, எப்படி இருந்தாலும் எணவினை வீனாக்காதீர்கள்'' என்றார்.

விஜய் எலன்ஷா நிர்வாக இயக்குநர் சிவ் குமார் கூறியதாவது:-

''உணவு என்பது உணர்வுடன் தொடர்புடையது. நாம் அனைவரும் உணவிற்கு மரியாதை செலுத்த வேண்டும். நமக்கு மூன்று வேளையும் உணவு கிடைக்கிறது என்றார் அது நாம் பெற்ற ஆசீர்வாதமே. நாங்கள் எங்கள் உணவகத்தில் உணவை வீணடிக்க அனுமதிப்பதில்லை. நுகர்வோரின் தேவைக்கேற்பவே உணவினை பரிமாறுகிறோம். மேலும், மீதமாகும் உணவுகள் தேவைப்படுவோருக்கு அளிக்கப்படுகிறது'' என்றார்.

தட்'ஸ் ஒய் குரூப் ரஞ்சனா கூறியதாவது:- 

''இயற்கை முறையில் விளைவிக்கப்படும் காய்கறிகளைக்கொண்டே உணவி தயாரிக்கப்படுகிறது. மேலும்,இயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட எண்ணையையே சமைக்க பயன்படுதிதுகிறோம். இந்த சமூகத்தில் எத்தனையோ பேர் உணவின்றி உள்ளனர். அவர்களுக்காக நாங்கள் சில தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் உணவளித்து வகிறோம்'' என்றார்.

நீரஜ் அகர்வால் இனிப்புக் கடை நிறுவனரான நீரஜ் அகர்வால் கூறியதாவது:- 

"உணவானது ஆரோக்கியமானதாகவும், சுகாதாரமாணதாகவும் இருக்க வேண்டும். எந்தளவிற்கு முடியுமோ அந்தளவிற்கு துரித உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இந்த கொள்கையே எங்களது கடையிலும் பின்பற்றப்படுகிறது. நாங்கள், பீசா, பர்கர் போன்ற உணவு வகைகளை செய்வதில்லை. மக்கள் சுகாதாரமான உணவையே விருப்புகின்றனர். அதற்கேற்பவே இங்கு உணவு தயாரிக்கப்படுகிறது. சில உணவகங்களில் உணவு செய்யும் முறைகள் சுகாதாரமாக இருப்பதில்லை. அதனாலேயே பெரும்பாலான மக்கள் உணவகங்களில் சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். ஆனால், எங்கள் உணவகத்தைப் பொருத்தவரை அனைத்து தொழிலாளர்களும் சுத்தத்தை கடைபிடித்து வருகின்றனர். எங்கு உணவு தயாரிக்கப்படுகிறது என்பது முக்கியமில்லை. எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதே முக்கியம்'' என்றார். 

சாக்லேட் கனேச் நிறுனத்தின் அருண் விஸ்வநாதன் கூறியதாவது:-

"அதிகப்படியான இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட்டு கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். அதுவே நம் நாட்டிற்கு தற்சமயம் தேவையாக உள்ளது. நாம் நம் முன்னோர்களில் பாரம்பரிய விவசாயத்தில் ஈடுபட வேண்டும். விவசாயிகளுக்கான நல்ல வாய்புகளை உருவாக்க வேண்டும். விவசாயம் இன்றி உணவு இல்லை, இவ்வுலல் எதுவும் இல்லை என்பதை எதிர்கால தலைமுறையினருக்கு உணர்த்தவேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். இளைஞர்கள் விவசாயத்திற்கான தேவையை புரிந்து அதில் ஈடுபடுவாகள் என நன் நம்புகிறேன்" என்றார்.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...