'புட் பேங்க்' என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பு மூலம், ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டன



கோவையை சேர்ந்த 'புட் பேங்க்' தன்னார்வத் தொண்டு அமைப்பு, இன்று உலக உணவு நாளை கொண்டாடும் விதமாக, நலிந்தோருக்கும் ஆதரவற்றோருக்கும் உணவுகள் வழங்க ஏற்பாடு செய்தது.

அதன்படி, இன்று, அந்த அமைப்பைச்சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கோவை வ.உ.சி. பூங்காவில் திரண்டு, மக்களுக்கு உணவுகளை வழங்கினர்.

இது குறித்து அந்த அமைப்பின் ஒரு ங்கிணைப்பாளர் வைஷ்ணவி கூறுகையில், 'எங்களது முக நூல் பக்கத்தில் 4800 பேர் எங்களை பின்  தொடர்கின்றனர். அவர்களை ஒன்று திரட்டி, மக்களுக்கு உணவு வழங்க முடிவெடுத்தோம். தொடர்ந்து இன்று ஏராளமானோர் அவர்கள் வீடுகளில் உணவு சமைத்தும், பிஸ்கட்டுகள், பழவகைகளையும்,  ஆதரவற்ற மக்களுக்கு கொடுத்து வருகின்றனர்.



வ.உ.சி. பூங்கா தொடங்கி, ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, நஞ்சுண்டாபுரம், காந்திபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் உணவுகள் விநியோகிக்கப்பட உள்ளது. அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம். இந்த உணவு நாளில், எங்கள் அமைப்பு முதலாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது மகிழ்ச்சியளிக்கிறது' என்றார்.  இந்நிகழ்வில் பங்கேற்ற பொது மக்கள் பலர் ஆர்வத்துடன் தாங்கள் சமைத்த உணவுகளை வழங்கி, பசியுடன் இருப்பவர்களை மகிழ்வித்தனர்.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...