தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற ஆனந்தகுமார் உயிரிழப்பு

கோவை வன்முறையில் ஈடுபட்ட வழக்கில் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்கிற அச்சத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இந்து முன்னணியை சேர்ந்த ஆனந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கடந்த 22 ஆம்தேதி மர்மநபர்களாள் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து கோவை மாவட்டம் முழுவதும் வன்முறை நடந்தது. இதனையடுத்து வன்முறையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டவர்களை கைதுசெய்தனர். 

இந்நிலையில், கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த இந்துமுன்னணியை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் கடந்த மூன்றாம்தேதி திடீரென தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். காவல்துறையினரும் பலத்த பாதுகாப்போடு ஆனந்தகுமார் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு காவல்துறையினர் ஏற்பாடு செய்தனர். அதற்குள்ளாக ஆனந்தகுமாரின் சகோதரர் ரஞ்சித்குமார் தனது தம்பியை சென்னைக்கு கொண்டு செல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், காவல்துறையினர் மன உளைச்சளை ஏற்படுத்துவதாக கூறி அவரது சகோதரர் ரஞ்சித்குமார் வியாழனன்று அரசுமருத்துவமனை வளாகத்திலேயே தற்கொலைக்கு முயன்று அதேமருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டார். இந்நிலையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற ஆனந்தகுமார் சிகிச்சை பலனின்றி மதியம் உயிரிழந்தார்.

முன்னதாக தற்கொலைக்கு முயன்றதாக போத்தனூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், வன்முறையில் ஈடுபட்டு கலவரம் செய்ததாக கோவை பந்தய சாலை காவல்நிலையத்தில் ஆனந்தகுமார் மீது இன்று வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் ஆனந்தகுமார் சிசிக்சை பலனின்றி இறந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...