தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துக்கள் இயக்கம்


தீபாவளி பண்டிகையொட்டி தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என சென்னையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி வரும் அக்டோபர் 26, 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் சென்னை, கோவை, மதுரை, நெல்லை உள்பட முக்கிய ஊர்களுக்கிடையே சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பதிலாக , சென்னை நகரின் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து புறப்படும் என்று அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம். புதுச்சேரி, கடலூர் பகுதி சிறப்பு பேருந்துகள் கோயம்பேடு தேர்தல் ஆணையப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். விக்ரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சை, வழித்தடத்தில் செல்லும் சிறப்பு பேருந்துகள் தாம்பரம் சாணிட்டோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் சிறப்பு பேருந்துகள், பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். ஆந்திரா செல்லும் சிறப்பு பேருந்துகள் அண்ணா நகர் மேற்கு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். பிற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள், வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். அக்டோபர் 26 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்பவர்கள், அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு செல்ல வேண்டும். அனைத்து பேருந்து நிலையங்களுக்கும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும். இவ்வாறு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...