ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 26ம் ஆண்டு விளையாட்டு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் காலை அறிவியல் கல்லூரியில் 26ம் ஆண்டு விளையாட்டு விழா நேரு விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை மாநகரக் காவல் துணை ஆணையர் மகுடபதி அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மாணவிகளின் அணிவகுப்பினை ஏற்று மரியாதையை செய்தார். பின்னர், ஒலிம்பி  திபத்தினை ஏற்றி வைத்து விளையாட்டு போட்டியினை துவக்கி வைத்தார். 

பின்னர் அவர் பேசுகையில்:
இன்றைய காலத்தில் பெண்கள் உடல்நலம் பேணுதல் மிக அவசியமான ஒன்று. பெண்கள் இல்லத்திலும், பணியிடத்தில் பல்வேறு பணிகளை  ஆற்றுகின்றனர். அவர்கள் பிறர் துணையின்றி செயல்பட, உடல்நலம் பேணுதல் மிகவும் அவசியம் என்றார். 


ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதர்வர் சித்திரா பேசுகையில்: 
பெண்கள் வாழ்வில் உண்மை, விடாமுயற்சி, வலிமை, ஆளுமைத் தன்மை போன்ற பண்புகளை தக்க வைத்துக்கொண்டால், வெற்றியை நிலைநாட்ட முடியும் என்றார். 

இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் மகேஸ்வரி அணைத்து விளையாட்டு போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தினார். அனைத்து போட்டிகளிலும் சிறந்த விளையாட்டு அணியாக இண்டிகோ அணி வெற்றிவாகை சூடியது. அனைத்து போட்டிகளிலும் சிறந்த வீராங்கனை பட்டத்தினை இண்டிகோ அணியின் வீராங்கனை ஜனனி பெற்றார். சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருதினை நீலநிற அணியின் ஜெய ஸ்ரீ பெற்றுக் கொண்டார்.


இறுதியில் மாணவர் மன்றத் துணை செயலர் ஐஸ்வர்யா நன்றியுரை கூறினார்.

Newsletter

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...