வி.ஐ.பி., பாதுகாப்பை ஏற்க மறுத்த சிங்கப்பூர் பிரதமர்

புதுடில்லி: இந்தியா வந்த சிங்கப்பூர் பிரதமர் லி ஹிசியான் லூங், வி.ஐ.பி., பாதுகாப்பை ஏற்க மறுத்து பஸ் மூலம் ஓட்டலுக்கு சென்றார்.சிங்கப்பூர் பிரதமர் லி ஹிசியான் லூங் 5 நாள் அரசு முறை பயணமாக நேற்று மாலை டில்லி வந்துள்ளார். இன்று அவருக்கு அரசு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பின்னர் அவர், பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க உள்ளார் பிரதமர் மோடியுடன் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். சிங்கப்பூர் பிரதமருடன், அவரது மனைவி, முக்கிய அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் டில்லி வந்துள்ளனர். நாளை மற்றும் நாளை மறுநாள் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் செல்லும் சிங்கப்பூர் பிரதமரை அம்மாநில முதல்வர் வசுந்தர ராஜே சந்தித்து மதிய விருந்து அளிக்க உள்ளார்.

உதய்ப்பூரில் சுற்றுலா தொடர்பான நிகழ்ச்சி துவக்க விழாவில் கலந்து கொள்ள உள்ளார் சிங்கப்பூர் பிரதமர்.இந்நிலையில், நேற்று டில்லி வந்த அவரை மத்திய இணையமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் மற்றும் அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றார். பின்னர், சிங்கப்பூர் பிரதமர் வி.ஐ.பி., பாதுகாப்பை ஏற்க மறுத்த அவர் பஸ் மூலம், தான் தங்கவுள்ள ஓட்டலுக்கு சென்றடைந்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...