சசிகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் நிலையை காவல்துறை உடனடியாக தெரிவ�

கோவையில் இந்து முன்னனி பிரமுகர் சசிகுமார் கடந்த மாதம் 22.9.2016 அன்று மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நடைபெற்ற வன்முறை சம்பவங்களால் கோவையில் காவல்துறையினர் பலரை சந்தேகத்தின் பேரில் கைது  செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் நிலையை காவல்துறை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

 கோவையில் கடந்த 22ம் தேதி இந்து முன்னனி பிரமுகர் ச்சிகுமார் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது இறுதி ஊர்வலத்தின்போது பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.அதில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.இந்த சூழலில் கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோரை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் துடியலூர் பகுதியில் சந்தித்தார்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,வன்முறை சம்பவம் தொடர்பாக தற்போது காவல்துறையினர் அப்பாவிகளை கைது செய்துள்ளதாகவும் கைது செய்யப்பட்டதில் சில விஷயங்கள் உள்ளே இருப்பதாகவும் குற்றம் சாட்டியதுடன் அவர்களை எங்கு வைத்துள்ளனர் என்பது குறித்த பட்டியல் மற்றும் விவரங்களை உடனடியாக வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். கொலையாளிகளை கைது செய்ய வேண்டியது காவல்துறையினரின் கட்டாய கடமை எனவும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்வதில் யாருடைய தலையிடும் இருக்க கூடாது எனவும் கூறினார். இதேபோல் சிபிசிஐடி காவல்துறையினர் இவ்வழக்கை விரைந்து முடிக்க வேண்டுமெனவும் ஏற்கனவே இதுபோன்ற வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வழக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரித்தால் நன்றாக இருக்கும் எனவும் பொன் ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக வன்முறை சம்பவம் தொடரபாக கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கைது செய்யப்பட்டவர்களை மீட்டு தர கோரி கண்ணீருடன் அமைச்சரிடம் மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...