ஒ.எல்.எ (OLA) கால் டாக்ஸி நிறுவனம் மோசடி

பிரபல தனியார் கால் டாக்ஸி நிறுவனமான ஒ.எல்.எ (OLA) கால் டாக்ஸி நிறுவனத்தில் கூடுதல் கமிஷன் தருவதாக கூறி பல லட்ச ரூபாய் வரை கடனாளி ஆகிவிட்டதாக குற்றம்சாட்டி கோவையில் 50க்கும் மேற்பட்ட கார் உரிமையாளர்கள் அந்நிறுவனத்தை முற்றுகையிட்டு அலுவலக வாயில் முன்பு அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


பிரபல தனியார் கால் டாக்ஸி நிறுவனமான ஒ.எல்.எ கால் டாக்ஸி நிறுவனம் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. அந்நிறுவனத்துடன் இணைந்து காரை வாடகைக்கு இயக்கப்பட்டால் அதிகளவிலான லாபம் பெற்று தரப்படும் என விளம்பரம் செய்ததன் அடிப்படையில் ஏராளமானோர் அந்நிறுவனத்துடன் இணைத்து வாடகைக்கு ஒட்டி வருகின்றனர். அதன் அடிப்படையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஒ.எல்.எ கிளை நிறுவனத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார் உரிமையாளர்கள் அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து தொழில் நடத்தி வருகின்றனர். 


ஆரம்பத்தில் கிலோ மீட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட்டு அதில் 15 சதவிகிதம் ஒ.எல்.எ நிறுவனத்திற்கும் 85 சதவிகிதம் காரின் உரிமையாளருக்கும் வழங்கப்படும் என ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது 28 சதவிகிதம் நிறுவனத்துக்கு வழங்கவேண்டும் என அந்நிறுவனம் வற்புறுத்துவதால் பெரிய நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும், அதனை தர மறுத்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட காரின் மீட்டரை அந்நிறுவனம் இன்று முடக்கிவிட்டதாக குற்றம்சாட்டி 50க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர். 


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், கடந்த 8 மாதமாக தங்களுக்கு வழங்க வேண்டிய ஊக்க தொகையை ஒ.எல்.எ நிறுவனம் வழங்க வில்லை எனவும், அந்நிறுவனத்தில் இணைந்து காரை இயக்கினால் மாதம் ஒரு லட்ச ரூபாய் வரை வருமானம் பெறலாம் என விளம்பரத்தை நம்பி தற்போது ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்தனர். தாங்கள் வாங்கிய காருக்கு மாத தவணை கட்டமுடியாமலும், ஒட்டுனருக்கு ஊதியமும் வழங்க முடியவில்லை என குற்றம்சாட்டிய உரிமையாளர்கள், தங்களுக்கு உரிய விளக்கம் நிர்வாகம் அளிக்கும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை என தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...