நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய்த்துறையினர் இரண்டாம் நாளாக ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

கோத்தகிரி கோட்டஹால் சாலையில் ஏராளமான கட்டிடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அதே பகுதியில் வசிக்கும் சின்னசாமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கடந்த வாரம் நேரில் ஆய்வு செய்து உரிய அதிகாரிகளை வைத்து நிலத்தை அளவீடு செய்ததில், பிரபல ஹோட்டல் உட்பட பலர் இப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளது தெரிய வந்தது. இந்நிலையில், கோட்டஹால் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் ஜெ.சி.பி இயந்திரம் மூலமாக வட்டாட்சியர் ரவிக்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன், வருவாய் ஆய்வாளர் பூவேந்திரன், வி.ஏ.ஓ. லதா ஆகியோர் மேற்பார்வையில் இரண்டாம் நாளாக அகற்றினர்.