திருப்பூர் : திருப்பூர் அருகே மூளி குளத்தில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதந்து கிடப்பது மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊத்துக்குளி சாலை பாரப்பாளையம் அருகே அமைந்துள்ள மூளி குளத்தில் துர்நாற்றம் வீசி வந்தது. இதனால், சந்தேகமடைந்த பொதுமக்கள் குளத்திற்கு சென்று பார்த்த போது, லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதந்து வருவது தெரியவந்தது. இதைக் கண்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

55 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மூளி குளத்தில் பெரும்பாலும் ஆகாய தாமரை செடிகள் பரவி உள்ளன. இது முழுவதும் மீன்கள் செத்து மிதந்து வருவதால், குளத்தின் அருகாமையில் கூட செல்ல முடியாத அளவிற்கு கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. திருப்பூரில் செயல்பட்டு வரும் சில சாய ஆலைகள் தங்கள் சாயக் கழிவுகளை இரவு நேரங்களில் குளத்தில் கொட்டிவிட்டுச் செல்வதே, மீன்கள் சாவிற்கு காரணம் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு முறையான தகவல் தெரிவித்தும், மீன்களை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, விஷக் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.