நீலகிரி : சோலூர்மட்டம் கிராமத்தைச் சேர்ந்த நடராஜ் என்பவர் கரடி தாக்கியதில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி காவல்பகுதிக்கு உட்பட்ட சோலூர்மட்டம் கிராமத்தில் வசித்து வருபவர் நடராஜ் (48). இவர், கோழிமராடா பகுதியில் அவரது தேயிலை தோட்டத்திற்கு சென்ற போது, அங்கு மறைந்திருந்த கரடி தாக்கியது. இதில், கை, கால் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்ட நடராஜை, அருகிலிருந்தவர்கள் மீட்டு, சோலூர்மட்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்தனர். பின்னர், கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று மேல்சிகிக்சை அளித்தனர்.
தொடர்ந்து, மருத்துவரின் ஆலோசனைப்படி கோவை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றைக்கரடியைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடவேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.