கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சத்துணவு ஊழியர்களுக்கு ரூ.3 ஆயிரத்து 500 மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் வழங்குதிடுதல் மற்றும் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ரூ.3 லட்ச ரூபாய் பணிக்கொடை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்து இருந்தனர். இந்த நிலையில், இதுவரை தமிழக அரசு தங்களை அழைத்து பேசவில்லை என கூறி இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தங்கள் பிரதிநிகளை உடனடியாக அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே சமையல் செய்து நூதன முறையில் தங்களது போராட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் நள்ளிரவும் தொடர்ந்தது.

