கோவை: கோவை மாநகர காவல் துறையில் நீண்ட நாட்களாக பணிபுரிந்து வந்த மோப்ப நாய் இன்று உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தது காவல் துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கோவை : கோவை மாநகர காவல் துறையில் நீண்ட நாட்களாக பணிபுரிந்து வந்த மோப்ப நாய் இன்று உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தது காவல் துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

கோவை மாநகர காவல் துறையில் மோப்ப நாயாக இருந்த டயானா கடந்த எட்டு ஆண்டுகளாக பல்வேறு பணிகளை செய்து வந்துள்ளது. குறிப்பாக திருடர்களை கண்டுபிடிப்பதில் காவல் துறைக்கு டயானா உறுதுணையாக இருந்து வந்தது. அதேபோல மாநில அளவில் பல்வேறு தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளது.

இந்நிலையில், உடல் நலக்குறைவால் டயானா நாய் இன்று உயிரிழந்தது. இதனை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் உள்ள மையத்திலேயே அடக்கம் செய்த போலீசார் அதற்கு மரியாதை செலுத்தினர். பல ஆண்டுகளாக மோப்ப நாய் பிரிவில் இருந்த நாய் உயிரிழந்தது காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.