89-வது வார்டு பகுதியில் சுகாதாரப்பணிகள் குறித்து ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி 89-வது வார்டு சுண்டக்காமுத்தூர், வென்னல்நாயுடு தெரு, பள்ளிக்கூடம் வீதி ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் வீடு வீடாகச் சென்று மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு சுகாதாரப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

கோவை : கோயம்புத்தூர் மாநகராட்சி 89-வது வார்டு சுண்டக்காமுத்தூர், வென்னல்நாயுடு தெரு, பள்ளிக்கூடம் வீதி ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் வீடு வீடாகச் சென்று மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு சுகாதாரப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். 



அப்போது, பொது மக்களின் வீடுகளில் நேரில் பார்வையிட்டு குடிநீர் தொடர்ந்து வருகிறதா எனவும், குப்பைகள் அள்ளப்படுகிறதா எனவும், கொசு மருந்து தெளிக்கப்படுகிறதா எனவும் பொதுமக்களிடம் நேரில் கேட்டறிந்து ஆய்வு செய்தார். 

மேலும், பேருந்து நிலையம் அருகில் பூங்கா முன்பாக குடிநீர் சுகாதாரமாக கிடைக்கிறதா எனவும், கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா எனவும் மாநகராட்சி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 



சமீம் கார்டனில் மரக்கன்றுகள் வளர்ப்பு பணிகள் நடைபெறுவதையும், உக்கடம் பெரியகுளத்தின் கரைகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதையும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.



இந்த ஆய்வின்போது உதவி ஆட்சியர் (பயிற்சி) எஸ்.சினேகா, துணை ஆணையாளர் ப.காந்திமதி, தெற்கு மண்டல உதவி ஆணையாளர் ரவி, நகர் நல அலுவலர் சந்தோஸ்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...