கோவை: 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தீபாவளிக்கு 30 சதவீத போனஸ் வழங்கக் கோரி தீபாவளி தினத்தன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில் அவசரக் கால மருத்துவ நுட்புணர், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், கால் சென்டர் தொழிலாளர்கள் என மொத்தம் 4500-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.

அதேபோல இந்த ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் வாரத்தின் ஏழு நாட்களிலும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அடிப்படை வசதிகள் இன்றி இரவு பகல் என பாராமல் வேலை செய்து வருகின்றனர். ஆனால், ஆண்டுதோறும் தங்களின் நியாயமான போனஸ் தொகையை இவர்கள் போராடி வாங்க வேண்டியதாக உள்ளது.
அப்படி போராடி கேட்டாலும் தொழிலாளர்களின் முழுமையான கோரிக்கைகள் நிறைவேறுவதும் இல்லை. இப்படி இருக்க இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான 30 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
போனஸ் போராட்டம்
தமிழக அரசு பல்வேறு துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனசாக 20% வரை அறிவித்து வழங்கி வரும் நிலையில் தமிழ்நாடு அரசு இலவச 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை ஜி.வி.கே இ.எம்.ஆர்.ஐ நிர்வாகம் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆண்டுதோறும் தள்ளுகிறது.
அதேபோல 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சார்பில் கடந்த 15-ம் தேதி தமிழக முதல்வர் அவர்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருக்கும் 108 தொழிலாளர்களுக்கான நிரந்தர தீர்வை ஏற்படுத்தக் கோரி மனு அளித்திருந்தனர். ஆனால், நிர்வாகத் தரப்பில் சுமுக தீர்வுக்கு தயாராக இல்லாததால் அரசுத் தரப்பில் கொடுத்த மனுக்கள் செயலிழந்துவிட்டது என தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஆகவே, இந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று 108 ஆம்புலன்சின் சேவையில் பணி புரியும் இ.எம்.டி, பைலட் மற்றும் கால் சென்டர் ஊழியர்கள் என அனைவரும் 30 சதவீத போனஸ் வழங்கக் கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
கோவையில் ஆம்புலன்ஸ் சேவை செயல்படாது
கோவை மாவட்டத்தில் மொத்தம் 37 அவசர ஊர்தி வாகனங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் இரண்டு பச்சிளம் குழந்தைகள் வாகனம் மற்றும் 3 இருசக்கர வாகனங்களும் அடங்கும். இதில் 24 மணி நேரமும் பொதுமக்களுக்காக சுழற்சி முறையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர்.
இப்படியிருக்க அரசு தரப்பில் தொழிலாளர்களுக்கான 30 சதவீதம் போனஸ் வழங்கவில்லை என்றால் தமிழ்நாடு 108 அவசர ஊர்தியின் மாநில சங்கத்தின் அறிவுறுத்தலின் படி அடுத்த மாதம் ஐந்தாம் தேதி இரவு 8 மணி முதல் ஆறாம் தேதி இரவு 8 மணி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என கோவை மாவட்ட ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.
இதற்காக கோவை மாவட்டத்தில் பணிபுரியும் 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒரு மனதாக முடிவு எடுத்துள்ளதாக தொழிலாளர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் இதற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொள்ளும்படி தொழிற்சங்கத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் கோவை மாவட்ட பொறுப்பாளர்களான பாக்யராஜ் தீபன் கூறியதாவது:-
நாங்கள் இந்த 108 ஆம்புலன்ஸ் சேவையை வேலையாக செய்யாமல் சேவையாக செய்துவருகிறோம். இந்த பொதுமக்களுக்கான உயிர் காக்கும் சேவையை செய்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். எங்களுக்கு வரவேண்டிய நியாயமான போனஸ் தொகை வராத காரணத்தினால் நாங்கள் இந்த போராட்ட களத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.
108 தொழிலாளர்கள் ஆகிய நாங்கள் எந்தச் சூழ்நிலையிலும் அதிகபட்சம் வேலைநிறுத்தத்திற்கு எல்லாம் செல்வது கிடையாது. சுமூகமாக பேச்சுவார்த்தை மூலம் எங்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றவே விரும்புகிறோம். ஆனால் அதையும் தாண்டி எங்களை இந்த தர்மசங்கடமான சூழலுக்கு நிர்வாகம் தள்ளுகிறது.
ஆகவே பொதுமக்கள் எங்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து முன்னேற்பாடுகளை தயார் செய்து கொள்ளும்படி மிகுந்த வருத்தத்துடன் கேட்டுக் கொள்கிறோம்." என்றார்.
தினமும் சாலை விபத்துக்கள் அவசரத் தேவைகள் என பல்வேறு சூழல்களில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை இந்த 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் உடனடியாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்கின்றனர். அவசர காலத்திற்கு இந்த சேவை சிறப்பாக செயல்படுவதால் லட்சக்கணக்கான பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்த சேவை ஒரு மணி நேரம் தடைபட்டாலே பல்வேறு குழப்பங்களும், உயிரிழப்புகளும் ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே கடந்த சில மாதத்திற்கு முன்பு 108 ஆம்புலன்ஸ் சேவையின் எண் சுமார் ஒரு மணி நேரம் செயல்படாததால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். ஆனால், ஒரு நாள் முழுவதும் இந்த சேவை செயல்படவில்லை என்றால் பொதுமக்கள் கடும் துயரத்துக்கு ஆளாவார்கள்.
இதுகுறித்து சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான பிரதாப் கூறியதாவது:-
108 சேவையானது பொதுமக்களின் முக்கிய அங்கமாக உள்ளது. இந்த சேவை ஒரு மணி நேரம் தடைபட்டாலே பொதுமக்கள் சிரமம் அடைவர். ஆனால் 108 தொழிலாளர்கள் வரும் ஐந்தாம் தேதி இரவு 8 மணி முதல் ஆறாம் தேதி இரவு எட்டு மணிவரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவெடுத்தது பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் வைக்கும் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு கவனத்தில் கொண்டு நிர்வாகத்திடம் 30 சதவீத போனஸ் தொகையை வழங்க உத்தரவிட வேண்டும். பொதுமக்களுக்கு சேவை செய்யும் இந்த தொழிலாளர்கள் அவர்களின் குடும்பத்திற்கு தேவையான தொகையை கொடுத்தால் தான் நிம்மதியாக சேவை செய்ய முடியும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்." என்றார்.