கோவை : கோவையில், யானை தாக்கி வனத்துறையின் ஆர்.ஆர்.டி (Rapid Response Team) பிரிவைச் சேர்ந்த இளைஞர் யானை தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வனத்துறையின், ஆர்.ஆர்.டி பிரிவில் பணியாற்றி வந்தவர் வெங்கடேஷ் (28). வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்திடும் நேரத்தில் அவற்றை விரட்ட வனத்துறைக்கு பக்கபலமாக இருந்து உதவி செய்வார்.
அவ்வாறு நள்ளிரவு 1.30 மணியளவில் தடாகத்தை அடுத்த பாப்பநாயக்கன்பாளையம் அருகே யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதில், ஒரு காட்டு யானையை வெங்கடேஷ் விரட்டியுள்ளார். ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றவுடன், அந்த யானை வெங்கடேஷை துரத்த ஆரம்பித்துள்ளது. பதற்றத்தில் தடுக்கிவிழுந்த வெங்கடேஷை யானை தாக்கியுள்ளது. இதில், படுகாயமடைந்த வெங்கடேஷ் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இந்த சூழலில், வனத்துறையில், ஆர்.ஆர்.டி பிரிவினருக்கு டார்ச் லைட், பட்டாசு போன்ற எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்காததே இந்த உயிர்ப்பலிக்கு காரணம் என்று குமுறுகின்றனர் பணியாளர்கள்.