சென்னை: எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், 18 எம்.எல்.ஏ.,க்களுடனும் ஆலோசனை மேற்கொண்டு முடிவு எடுக்கப்படும் என்று அ.ம.மு.க துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியிடப்பட்டது. மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணன் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கினார். அப்போது, 18 எம்.எல்.ஏ.,க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது சட்ட விரோதம் அல்ல என்றும், அந்த தகுதி நீக்கம் செல்லுபடியாகும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அ.ம.மு.க துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், "இது எங்களுக்கு பின்னடைவு இல்லை. அனுபவம் தான். இந்த தீர்ப்பு குறித்து 18 எம்.எல்.ஏ.,க்களுடனும் ஆலோசனை மேற்கொள்வேன். அவர்கள் மேல்முறையீட்டுக்குச் செல்லலாம் என்றால், வழக்கு தொடர்வேன். தேர்தலை சந்தித்துக்கொள்ளலாம் என்றால் அதன்படி செயல்படுவேன்.
இந்த தீர்ப்பு எங்கள் கட்சிக்குள் இருக்கும் தொண்டர்கள் மத்தியில் ஒற்றுமையை அதிகரிக்கும். இடைத்தேர்தல் வந்தாலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.