திருப்பூர்: திருப்பூரில் பள்ளிக்கல்வியில் இந்துத்துவா கொள்கைகளை பரப்பும் மாவட்ட கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சார்பில் கடந்த 22-ம் தேதி ஜெய்வாபாய் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. வரலாற்று நிகழ்வுகள் தொடர்பான பயிற்சி முகாம் என்றிழைக்கப்பட்ட நிலையில் இந்துத்துவா, ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளையும், தமிழக பாடத்திட்டத்திற்கு சம்பந்தமில்லாத நிகழ்வுகளை எடுக்க வைத்ததாக பட்டதாரி ஆசிரியர்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் இத்தகைய வகுப்பை ஏற்பாடு செய்த மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தினை முற்றுகையிட்டு நேற்று (புதன்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்ல முயன்ற போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை போலீசார் கைது செய்தனர்.