வெலிங்டன் அருகே ராட்சத மரம் விழுந்ததால் உதகை மலைரயில் சேவை 2 மணி நேரம் பாதிப்பு

நீலகிரி : குன்னூர் அருகே உள்ள வெலிங்டனில் இருக்கும் ரயில்பாதையில் ராட்சத மரம் விழுந்ததால் சுமார் 2 மணி நேரம் மலைரயில் சேவை பாதிக்கப்பட்டது.


நீலகிரி : குன்னூர் அருகே உள்ள வெலிங்டனில் இருக்கும் ரயில்பாதையில் ராட்சத மரம் விழுந்ததால் சுமார் 2 மணி நேரம் மலைரயில் சேவை பாதிக்கப்பட்டது. 



குன்னூர் - உதகை ரயில் பாதையின் ஓரத்தில் உள்ள ரயில்வே துறைக்கு சொந்தமான நிலத்தில் ராட்சத மரங்கள் உள்ளன. மழை காலங்களில் இந்த மரங்கள் தண்டவாளத்தில் விழுந்து விடுகின்றன. இதனால், ரயில் போக்குவரத்து பாதிப்படைகிறது. குன்னூர் பகுதியில் கடந்த ஒருவார காலமாக மழை இல்லாமல், பகல் நேரத்தில் வெயிலும், இரவு நேரத்தில் பனி பெய்வதும் போன்ற சீதோஷ்ண நிலை நிலவுகிறது. 



இந்த நிலையில், குன்னூர் - உதகை ரயில் பாதையில் வெலிங்டன் ரயில்நிலையம் அருகே ரயில் பாதை ஓரத்தில் ராட்சத மரங்களில் ஒன்று இன்று மாலை திடீரென்று ரயில் தண்டவாளத்தில் விழுந்தது. இதனால், சுமார் 8 அடி நீளம் கொண்ட ரயில் தண்டவாளம் சேதம் அடைந்தது. இதனால், குன்னூர் ரயில் நிலையத்திலிருந்து உதகைக்கு புறப்பட்டுச் சென்ற பயணிகள் ரயில் வெலிங்டன் ரயில்நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. 



அதேபோன்று, உதகையிலிருந்து குன்னூர் நோக்கிவந்த பயணிகள் ரயில் அருவங்காடு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. தகவலறிந்த ரயில்வே பொதுப்பணித் துறை ஊழியர்கள் விரைந்து சென்று ராட்சத மரத்தை மின் வாள் கொண்டு வெட்டி அகற்றினர். அதன் பின்னர், சேதம் அடைந்த தண்டவாளத்தை மாற்றி புதிய தண்டவாளத்தை பொருத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு மலைரயில் போக்குவரத்து சீரானது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...