நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் மக்களிடையே 'காவலன் செயலி' குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா உத்தரவிட்டுள்ளார்.

விபத்து மற்றும் ஏதேனும் ஆபத்தில் சிக்கி கொள்ளும் பொதுமக்களை மீட்க உதவுவதற்காக 'காவலன் செயலி'-யை தமிழக காவல்துறை கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. இதை மாவட்டம் முழுவதும் உள்ள மக்கள் பயன்படுத்தும் வகையில் அனைவருக்கும் கொண்டு செல்லும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனைத்து காவல் நிலையங்களுக்கும் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதனையடுத்து, கூடலூர் நியூ ஹோப் (new hope) காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் காவலன் செயலியைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக, மாணவ, மாணவிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மேலும், அந்த செயலியின் செயல்பாடுகள் குறித்தும் காவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் விளக்கமளித்தனர். இதில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.