கோவை: விற்பனை பணத்தை வங்கியில் இருந்து நேரிடையாக வந்து பெற்றுக்கொள்ளும் முறை தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இருநூற்றுக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளில் சிக்கலான சூழலில் மது விற்பனை செய்து அந்த பணத்தை முறையாக வங்கியில் செலுத்த செல்லும் விற்பனையாளர்கள் திட்டமிட்டு சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
மிகுந்த அச்சத்தோடு பாதுகாப்பற்ற சூழலில் தினசரி பணியாற்றி வரும் நிலையில், சென்னையில் வங்கிகளே டாஸ்மாக் கடைகளுக்கு நேரிடையாக வந்து பணத்தை பெற்றுச் செல்லும் நடைமுறையினை போல தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் நடைமுறைப் படுத்த வேண்டும், பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக ஊழியர்களாக அரசுக்கு வருவாய் ஈட்டும் டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்து வரும் விற்பனையாளர்கள் மற்றும் விற்பனை உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இல்லையேல் தற்காலிக பணியாளர்களாகவே உள்ள அனைத்து பணியாளர்களையும் ஒருங்கிணைத்து ஒரு இயக்கமாக போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.