கோவை : அவினாசி அருகே தனிக்குடித்தனம் கேட்டதன் காரணமாக விரக்தியடைந்த கணவர் தீக்குளித்த நிலையில், அவரை காப்பற்ற முயன்ற மனைவியும் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டியில் கிறிஸ்துவ மத போதகராக இருப்பவர் ரிச்சர்ட் ப்ராங்க்ளின் (30). இவரது மனைவி ஜெர்சி திருப்பூர் மாவட்டம் அவினாசி ஆட்டையாம்பாளையத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், ஜெர்சியை அவரது கணவர் தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். ஆனால், தனிக்குடித்தனம் கேட்டு கணவருடன் செல்ல மறுத்துள்ளார். இதில், மனமுடைந்த ரிச்சர்ட் ப்ராங்க்ளின் மனைவியின் வீட்டின் முன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். அவரின் அலறல் கேட்டு காப்பாற்ற வந்த மனைவியும் பலத்த தீ காயமடைந்தார்.
இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அவினாசி போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.