கோவை: 71-வது வார்டு அப்புசாமி லே-அவுட் மற்றும் நாராயணசாமி லே-அவுட் பகுதிகளில் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று டெங்கு கொசு உற்பத்தியாகாமல் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா? என பார்வையிட்டு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜய கார்த்திகேயன் இன்று ஆய்வு செய்தார்.

இது குறித்து கோவை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
டெங்கு கொசு உற்பத்தியாகாமல் தடுத்திட கொசு மருந்து தெளிக்கப்படுகிறதா? எனவும், குப்பைகள் அகற்றும் பணிகளை சுகாதாரப் பணியாளர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்களா? எனவும் இன்று நடைபெற்ற ஆய்வின் போது பொதுமக்களிடம் மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயன் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, மளிகைக் கடையில் ஆய்வு செய்த ஆணையாளர் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படுகிறதா? என பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது நகர் நல அலுவலர் சந்தோஷ்குமார், மத்திய மண்டல உதவி ஆணையர் செந்தில்குமார் ரத்தினம், உதவி நகரமைப்பு அலுவலர் செந்தில்பாஸ்கர், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.