கோவை: முல்லை பெரியாறு அணையின் கீழே புதிய அணை கட்ட கேரள அரசுக்கு அனுமதி அளித்து இருப்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் எனவும், இவ்வளவு பெரிய விவகாரத்தில் முதலமைச்சர் மவுனமாக இருப்பதாகவும் தி.மு.க பொருளாளர் துரை முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெறும் பொது கணக்கு குழு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க தி.மு.க பொருளாளர் துரை முருகன் இன்று கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, "முல்லை பெரியாறு அணையின் கீழே புதிய அணை கட்ட கேரள அரசுக்கு அனுமதி அளித்து இருப்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும். கேரளாவில் சபரிமலை விவகாரம், வெள்ளம் போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் கேரள அரசு காரியத்தில் கண்ணாக இருந்து சாதித்து இருக்கின்றது.

நாம் பேபி டேம் கட்டக் கூட சுற்றுச்சூழலை காரணம் காட்டி அனுமதி அளிக்க மறுக்கின்றார்கள். கேரளாவில் மட்டும் எப்படி சுற்றுச்சுழல் அனுமதி அளித்தது? பெரியார் டேம் கட்ட லாரியில் செல்லக் கூடாது என்றார்கள், எனவும் கழுதையில் கற்கள் கொண்டு சென்று கட்டப்பட்டது. தமிழக முதல்வரிடம் இந்த இலாகா இருக்கின்றது. இவ்வளவு பெரிய விவகாரத்தில் முதல்வர் கவனம் செலுத்தவில்லை. இந்த அரசு கமிஷன், கலெக்சனில் மட்டுமே கவனம் செலுத்துகின்றது." என்றார்.

அமைச்சர் ஜெயக்குமார் ஆடியோ விவகாரம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்த துரை முருகன், தி.மு.க.,வின் ரிங்மாஸ்டர் அமித்ஷா என அ.தி.மு.க.,வின் தம்பிதுரை சொல்லி இருப்பதற்கு பதில் அளிக்க மறுத்து விட்டார்.