கோவை: தனி மருத்துவ கவுன்சில் அமைத்திட வேண்டும் என்றும் மருத்துவமனை பதிவு சட்டத்தில் இருந்து விதிவிலக்கு அளிக்கக் கோரியும் பாரம்பரிய நாட்டு மருத்துவர்கள் சங்கத்தினர் கோவையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாரம்பரிய நாட்டு மருத்துவர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சண்முகராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறுகையில், "பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரிய மருத்துவத்தை ஒழிக்கும் முயற்சியில் கார்பரேட் நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. சித்த மருத்துவம் மூலம் 4,448 வியாதிகளை குணப்படுத்த முடியும். மேலும், பல தீர்க்க முடியாத நோய்களுக்கு சித்த மருத்துவம் தீர்வாக இருந்து வருகிறது.

பாரம்பரிய மருத்துவர்களுக்கு நெருக்கடி அளிப்பதன் மூலம் அவர்களை வெளியேற்றும் முயற்சியே இது. பாரம்பரிய மருத்துவத்தை காப்பாற்ற தனி மருத்துவ கவுன்சில் உடனடியாக அமைத்திட வேண்டும். மருத்துவ பதிவு சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இதற்கு மாநில அரசு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்." என்றனர்.