கோவை: ரோட்டரி இண்டர்நேசனல் 3201 மற்றும் அதி விரைவுப்படையின் 105-வது பட்டாலியன் இணைந்து கோவை-கொச்சிக்கு 200 கிமீ தூரத்திற்கு சைக்கிள் பேரணியை இன்று நடத்தினர்.

தூய்மை இந்தியா திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த பேரணி நடைபெற்றது. மேலும், உலக போலியோ நாள், மற்றும் சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகளை இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்லும் விதமாகவும், இதனால், சூழலுக்கு ஏற்படும் நன்மைகளையும் எடுத்துரைக்கும் விதமாக நடக்கும் பேரணியில் 70 பேர் கலந்துகொண்டனர்.

இந்த பேரணி இன்று காலை வ.உ.சி மைதானத்தில் தொடங்கியது. தொடர்ந்து நாளை மாலை 6 மணியளவில் கொச்சி விமான நிலையத்தை சென்றடைகிறது. இந்த பேரணியை கோவை மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

இதேபோல், 2.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாக்கத்தான் நடைபெற்றது. அதில் ரோட்டரி கிளப்பை சேர்ந்த 200 பேர் கலந்து கொண்டு தூய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக துண்டு பிரசுரங்களை வழங்கினர்.