கோவை : இந்திய சந்தையில் டீலராக இருக்கும் சந்திரா ஹுண்டாய், தனது 20-ம் ஆண்டு விழாவை இன்று கொண்டாடியது.

கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஷோரூமில் நடைபெற்ற இந்தக் கொண்டாட்டத்தில் சந்திரா ஹுண்டாய் நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் ஆர். ரஞ்சித் கோவிந்தராஜ் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது :- சந்திரா ஹுண்டாய் நிறுவனம், வாடிக்கையாளர் உறவுகளை உயரியதாகக் கொண்டுள்ளதற்குச் சான்றாக 50-க்கும் மேற்பட்ட சீரிய விருதுகளைப் பெற்றுள்ளது. 25,000-க்கும் மேற்பட்ட கார்கள் விற்பனை மற்றும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கார்களை சர்வீஸ் செய்துள்ள இந்நிறுவனம் தற்போது 10 லட்சம் கார்களை சர்வீஸ் செய்யும் இலக்கை நோக்கி நடைபோடுகிறது, என்றார்.

கடந்த ஆண்டுகளில் இந்நிறுவனம், ஹுண்டாய் நிறுவனத்தின் 30-க்கும் மேற்பட்ட புதிய கார்களின் வெற்றிகரமான அறிமுகத்திலும், 26 இலவச கார் கேர் கிளீனிக் எனும் சர்வீஸ் முகாம்களிலும் பெரும் பங்காற்றியுள்ளது. இவ்விழாவில் சந்திரா ஹுண்டாய் வளர்ச்சிக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்த வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சப்ளையர்கள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

சந்திரா ஹுண்டாய் கொங்குப் பகுதியில் 5 விற்பனை மற்றும் சேவை மையங்களையும், மேலும் ஜி.ஆர்.ஜி. மொபிஸ் எனும் 3 உதிரி பாகங்கள் பகிர்வு நிலையங்களையும் கொண்டு செயல்படுகிறது.