கோவை : கோவை மாநகராட்சி சார்பில் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு பொருட்களை கோவை மக்களுக்கு அறிமுகம் செய்யும் வகையில், வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் 'மஞ்சப்பை' எனப்படும் பிளாஸ்டிக் மாற்றுப் பொருள் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி, ராக் அமைப்பு, உபர் ஈட்ஸ் மற்றும் ரேடியோ சிட்டி ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஒருங்கிணைக்கும் இந்தக் கண்காட்சியில், துணிப்பை வகைகள், மூங்கில் மற்றும் காகிதத்தால் உருவாக்கப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் என சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத ஏராளமான தயாரிப்புகள் சுமார் 40 ஸ்டால்களில் விற்பனை மற்றும் காட்சிக்காக வைக்கப்படவுள்ளன.
இதுகுறித்து ராக் அமைப்பைச் சேர்ந்த ரவீந்திரன் கூறியதாவது :- 'அடுத்த ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில். பொதுமக்களும், வணிகர்களும், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக எதை பயன்படுத்தலாம் என தேடி வருகின்றனர். ஏராளமான பிளாஸ்டிக் மாற்று பொருட்களும் ஆங்காங்கே விற்பனை செய்யப்படுகிறது. இவை அனைத்தையும் ஒரே இடத்தில் கொண்டு வந்தால், விற்பனையாளருக்கும், வாடிக்கையாளர்களுக்கும் பயனளிக்கும்.
இந்த கண்காட்சியில் உற்பத்தியாளர்களிடமிருந்து பொதுமக்களும் வணிகர்களும் நேரடியாக தயாரிப்புகளை வாங்கிச் செல்லலாம். ஹோட்டல் உரிமையாளர்கள் இந்த கண்காட்சியில் தனக்கு தேவையான அனைத்து விதமான பிளாஸ்டிக் மாற்று பொருட்களையும் வாங்கிச் செல்லலாம். புதிதாக தொழில் துவங்குவோர் கண்காட்சியில் வைக்கப்படும் இயற்கை சார்ந்த தயாரிப்புகளை பார்வையிட்டு புதிய திட்டங்களை உருவாக்கி முன்னேற்றம் அடையலாம். மேலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் மாற்றுப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்துவதே இக்கண்காட்சியின் பிரதான நோக்கம்' என்றார்.
பிளாஸ்டிக் மாற்று பொருட்கள் மட்டுமின்றி வீடுகளில் சேகரிக்கப்படும் காய்கறிகழிவு, காய்ந்த இலை போன்ற மக்கும் குப்பைகளை எளிய முறையில் மறுசுழற்சி செய்து உரம் தயாரிக்கும் கருவிகளும் இந்தக் கண்காட்சியில் விற்பனை செய்யப்படவுள்ளன.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் மாற்றுப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பங்குபெறும் 'மஞ்சப்பை' கண்காட்சியை கோவை மாநகராட்சி ஆணையாளர் மரு.க.விஜயகார்த்திகேயன் துவங்கி வைக்கிறார். 27-ம் தேதியன்று மாலை நடக்கும் நிகழ்ச்சியில், பட்டிமன்ற பேச்சாளர் டாக்டர். பர்வீன் சுல்தானா மற்றும் குழுவினர் பங்குபெறும் பிளாஸ்டிக் மாற்றுப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பட்டிமன்றமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.