உதகையில் மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டவர் மரம் விழுந்து பலி

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் மரம் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் மரம் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக விபத்துகள் ஏற்படாமல் இருக்க, அபாயகரமான மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல, உதகையில் இயங்கி வரும் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்ற கல்லூரி முதல்வர் உத்தரவிட்டிருந்தார். 

இதனையடுத்து, கல்லூரி வளாகத்தில் இருக்கும் மரங்களை அகற்றும் பணியில் மரத்தை அகற்றுபவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று குந்தா பகுதியைச் சேர்ந்த சசி (50) என்பவர் கீழே விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது, தீடிரென யாரும் எதிர்பார்க்காத நிலையில், மரம் ஒன்று அவர் மீது விழுந்தது. இதில், மரத்தின் அடியில் சிக்கிக்கொண்ட அவரை மீட்க தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சசியை மீட்டனர். ஆனால், தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். 

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பி1 காவல்நிலைய போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...