நீலகிரி : நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள பைனான்ஸ் கடையில் கொள்ளையடித்த திருடர்களை 24 மணிநேரத்தில் போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள பைனான்ஸ் கடையில் கொள்ளையடித்த திருடர்களை 24 மணிநேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

மஞ்சூர், எடக்காடு பகுதியில் தனியார் பைனான்ஸ் கடை இயங்கி வருகிறது. இந்த பைனானஸ் கடையை உடைத்து கொள்ளையடிக்க மர்ம நபர்கள் முயன்றுள்ளனர். ஆனால், இதன் உரிமையாளர் கடைகளில் நகைகள் ஏதும் வைக்காததால் கல்லாவில் இருந்த ரூ. 2,000-ஐ கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும், நேற்று நடந்து சென்றவரிடம் செல்போன் வழிப்பறியும் செய்துள்ளனர்.

இதனையடுத்து, கடை உரிமையாளர் எடக்காடு காவல்நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, பஞ்சாயத்து துணை காவல் கண்காணிப்பாளர் சங்கு தலைமையில் காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று குந்தாபாலம் பகுதியில் வாகன சோதனை செய்து கொண்டிருக்கும் போது, அவ்வழியாக வந்த இருவர் தப்பியோட முயன்றுள்ளனர். இதனைக் கண்ட போலீசார், அவர்களைப் பிடித்து விசாரித்த போது முன்னுக்குப் பின்னாக பதில் கூறியுள்ளனர்.
இதனால், சந்தேகம் அடைந்த போலீசார்அவர்களை பிடித்து விசாரிக்கும் போது, அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் (29) மற்றும் எடக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா என்கிற ராஜரத்தினம் (30) என்பதும், இவர்கள் இருவரும் நேற்று இரவு பைனான்ஸ் கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும், அவினாசி அனுப்புரப்பாளையத்தில் ஆதாய கொலை வழக்கில் இருவருக்கும் தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.