சுற்றுச்சூழல் தீர்வுக்கான உலகளாவிய மாநாடு : பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழலியல் ஆர்வலர்கள் பங்கேற்பு

கோவை : குளோபல் க்ளீன் அப் காங்கிரஸின் சார்பில் நடத்தப்பட்டு வரும் சுற்றுச்சூழல் தீர்வுக்கான 3 நாள் உலகளாவிய மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைசிறந்த சுற்று சூழலியல் ஆர்வலர்கள் பங்கேற்றுள்ளனர்.

கோவை : குளோபல் க்ளீன் அப் காங்கிரஸின் சார்பில் நடத்தப்பட்டு வரும் சுற்றுச்சூழல் தீர்வுக்கான 3 நாள் உலகளாவிய மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைசிறந்த சுற்று சூழலியல் ஆர்வலர்கள் பங்கேற்றுள்ளனர். 

கோவையில் உள்ள லி-மெரிடியன் ஓட்டலில் நேற்று தொடங்கிய இந்த மாநாட்டை சுற்றுச்சூழல் மதிப்பீடு மற்றும் சீரமைப்பு கூட்டுறவு ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியாவின் நியூகேஸ்டில் பல்கலைக்கழகம் மற்றும் க்ளோபல் கேர் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து புகழ்பெற்ற ஆய்வாளர்களின் விளக்கக்காட்சிகளுடன், இந்த கூட்டம் சிறந்த தொழில்முறைகள், ஆராய்ச்சி மற்றும் சர்வதேச சந்தைகளின் நுண்ணறிவு ஆகியவற்றை கொண்டு நடைபெற்று வருகிறது .

புகழ்பெற்ற சுற்றுச்சூழல் மாசுபாடு விஞ்ஞானியும், சுற்றுச்சூழல் தீர்வுக்கான உலகளாவிய மையத்தின் இயக்குனருமான பேராசியர் ரவி நாயுடு கூறியதாவது :- நாம் காலநிலை மாற்றத்தைவிட பெரிதான ஒரு சவாலை எதிர்கொண்டு வருகிறோம். ஆனாலும். அரசுகளும் தொழில்துறைகளும் இப்போதுதான் இப்பிரச்சனையின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளத் தொடங்கி இருக்கின்றன. ஏறத்தாழ 5 மில்லியன் அசுத்தமான தளங்கள் நூறு மில்லியன் மக்களின் நலன்களையும். உலகளாவிய சுற்றுச்சூழலையும் அச்சுறுத்துகின்றன. 

ஐரோப்ப இரசாயன நிறுவனம் 144,000 பதிவு செய்யப்பட்ட இரசாயனங்களின் பெயர்களை பட்டியலிடுகிறது. இப்பட்டியலில் ஒவ்வொரு ஆண்டும் 200 புதிய இரசாயனங்கள் இணைகின்றன. உலகளவில், பத்து சதவீதத்திற்கும் குறைவான மாசுபடுத்தப்பட்ட தளங்களே சுத்தம் செய்யப்படுகின்றன. மேலும், யுனைட்டட் ஸ்டேட்ஸை சுத்தப்படுத்த மட்டுமே ட்ரில்லியன் டாலர்கள் தேவைப்படலாம். இந்நிலை நம்மை ஆட்கொள்ள வெகுநாட்கள்ஆகாது. இரசாயன மாசுபாட்டின் வீரியத்தை கருத்தில் கொள்ளும் போது, அது காலநிலை மாற்றத்தை விட 5 மடங்கு பெரியதாய் மிரட்டுகிறது. இப்பிரச்சனைக்கு காரணமான மனிதசமுகமே, இதற்கான தீர்வையும் கண்டறிய வேண்டும். ஜி.சி.சி. 2018 இந்த முன்னெடுப்பின் ஒரு பாகமாகும், என்றார். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...