இந்திய சட்டதிட்டங்களை மதிக்காத பன்னாட்டு நிறுவனங்கள் : ஜி. ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

கோவை : இந்தியாவில் தொழில் தொடங்க வரும் பன்னாட்டு நிறுவனங்கள், உள்நாட்டுச் சட்டதிட்டங்களை பின்பற்றுவதில்லை என மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை : இந்தியாவில் தொழில் தொடங்க வரும் பன்னாட்டு நிறுவனங்கள், உள்நாட்டுச் சட்டதிட்டங்களை பின்பற்றுவதில்லை என மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். 



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த பெரியநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் பிரிக்கால் தொழிற்சாலையில் சமவேலைக்கு சமஊதியம் என்பதை வலியுறுத்தி அங்குள்ள தொழிலாளர்கள் இரண்டாம் நாளாக பட்டினி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு மார்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அரசியல் தலைமை குழு உறுப்பினருமான ஜி. ராமகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். 

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- மார்க்சிஸ்ட் கட்சி தொழில் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல. நம் நாட்டில் தொழில் தொடங்க வரும் பன்னாட்டு நிறுவனங்களோ, உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களோ, நம் நாட்டு சட்டங்களைப் பின்பற்ற வேண்டும் என்றே வலியுறுத்துகிறோம். இங்கு தொழில் தொடங்க வரும் பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலாளர் நலச்சங்கங்களை தொடங்க அனுமதிப்பதில்லை. தமிழக சட்டமன்றத்தில் நிலையாணை திருத்தச் சட்டம் கடந்த 2016-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு, அதற்கு இந்திய குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளார். 

இந்த நிலையில், இதுவரை தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் இந்த நிலையாணை சட்டத்தை அமல்படுத்தவில்லை. இதுவே, இன்று தமிழகத்தில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் உரிமை போராட்டங்கள் நடக்கக் காரணமாகிறது. எனவே, உடனடியாக வெளிநாட்டு நிறுவனங்களோ, உள்நாட்டு நிறுவங்களோ அனைத்தும் நம் நாட்டுச் சட்டத்தை பின்பற்ற வேண்டும்,” என்றார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...