ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் மீது சரமாரி தாக்குதல்: நீலகிரியில் காவலர் இடமாற்றம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை தாக்கிய காவலர் சுல்தான் அலாவுதீன் ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை தாக்கிய காவலர் சுல்தான் அலாவுதீன் ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா உத்தரவிட்டுள்ளார்.

கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் நேற்று மாலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்ற ஓர்க்சாப் பணியாளர் கார்திக் (20) என்ற நபரை போலீசார் துரத்தி பிடித்தனர்.

இதில் நிலை குலைந்த அவர் தவறி கீழே விழுந்தார். கீழே விழுந்த நபரை போலீஸ் காவலர் சுல்தான் அலாவுதீன் கடுமையாக தாக்கினார். மேலும், அவ்வழியாக வந்த மற்றொரு வாகன ஓட்டியையும் நடு ரோட்டில் வைத்து காவலர் சுல்தான் அலாவுதீன் தாக்கும் போது அவரும் நிலை தடுமாறி விழுந்தார். இதைப் பார்த்த பொது மக்கள் காவலரை கண்டித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பிரச்சனை பெரிதாவதை உணர்ந்த கோத்தகிரி காவல் நிலைய துணை ஆய்வாளர் நசீர், சம்பந்தப்பட்ட நபர்களை வீட்டிற்கு செல்லுமாறு அனுப்பி வைத்தார். இச்சம்பவம் ராம்சந்த் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அங்குள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவுகளைப் பெற்று தாக்குதலில் ஈடுபட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் பொதுமக்கள் வலியுறுத்தி காவல் துணை ஆய்வாளர் நசீரின் காரினை முற்றுகையிட்டனர். இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட சுல்தான் அலாவுதினிடம் விசாரணை மேற்கொண்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா அவரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...