திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் உள்ள தேங்காய் எண்ணெய் ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான அரவை கொப்பரை மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து தேதமடைந்தன.

காங்கேயம் திருப்பூர் சாலையில் வாய்க்காமேடு பகுதியில் சிவக்குமார் என்பவருக்குச் சொந்தமான 'ஓம் முருகா' என்ற எண்ணெய் ஆலை செயல்பட்டு வருகிறது. இன்று பணிக்கு வந்த தொழிலாளர்கள் கொப்பரையை அரைத்து எண்ணெய் பிழியும் பணியில் ஈடுபட்டிருந்தனர். தேங்காய் பருப்புகளில் உள்ள ஈரப்பதத்தை அகற்ற பாய்லர் மூலமாக கொப்பரைகள் மீது வெப்பம் செலுத்தப்பட்டு, கன்வேயர் வழியாக அரவை இயந்திரத்துக்கு வரும்.

அப்போது, பாய்லரில் இருந்து வந்த அதிக வெப்பத்தின் காரணமாக தேங்காய் பருப்புகளில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனைக் கவனிக்காத தொழிலாளர் வேலை செய்து கொண்டிருந்தபோது, மரத்தால் ஆன சேமிப்பு தடுப்புகளும் தீயில் எரிந்தது.
இதனால், அதிக புகை வெளியேறியதைக் கண்ட தொழிலாளர்கள் இயந்திரங்களை நிறுத்தி ஆலையை விட்டு வெளியேறினர். மேலும், இது தொடர்பாக காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான 5 டன் தேங்காய் கொப்பரைகள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமாகின.